Latest Updates
-
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவின் டாப் 10 பழமையான நகரங்கள் என்னென்ன தெரியுமா? இதில் 2 நகரங்கள் தமிழ்நாட்டில் இருக்காம் -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்.. -
உலக வரைபடத்திலேயே இல்லாத 7 நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளுக்கு தனி இராணுவம், கரன்சி கூட இருக்காம் -
கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட...
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டைக் கறியை வீட்டிலேயே செய்வது எப்படி? இதை டின்னருக்கு செஞ்சு அசத்துங்க...!
அனைத்து வீடுகளிலும் அசைவம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது முட்டைதான். ஹோட்டலுக்கு சென்றாலும் பெரும்பாலான மக்கள் முட்டை உணவுகளை ஆர்டர் செய்வார்கள், அதற்கு காரணம் அதன் சுவையும், விலையும்தான். ரெஸ்டாரன்ட்களில் பரிமாறப்படும் முட்டைக் கறியின் சுவை வீட்டில் செய்யும் முட்டை குழம்பை விட வித்தியாசமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் முட்டைக் கறி என்பது வேகவைத்த முட்டைகளைக் கொண்டு செய்யப்படும் மிக எளிதான மற்றும் சுவையான கறியாகும். இந்த முட்டை மசாலா ரெசிபிகளில் ஃப்ரெஷ் க்ரீம் அல்லது முந்திரி போன்ற காஸ்ட்லியான பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை, இருப்பினும் அது சுவையானதாக இருக்கும். எளிதாக சமைக்கக் கூடிய இந்த சுவையான முட்டைக் கறியை சாதம், இட்லி, சப்பாத்தி மற்றும் புரோட்டா போன்ற அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த சுவையான முட்டைக் கறியை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கிராம்பு - 4
இலவங்கப்பட்டை - 1
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இந்த எளிதான முட்டை கறியின் செய்முறையானது எளிமையான மற்றும் புதிதாக சமைப்பவர்களுக்கு ஏற்ற செய்முறையாகும், ஆனால் நீங்கள் அதை முயற்சிக்கும்போது கீழே உள்ள குறிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
- முட்டைகளை நன்றாக வேகவைக்க, அவற்றை மெதுவாக கொதிக்கும் நீரில் இறக்கி, 12 நிமிடங்களுக்கு அதிக தீயில் சமைக்கவும். தண்ணீரை வடிகட்டவும், ஓடு உரிக்கப்படுவதற்கு முன் 10 நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரில் வைக்கவும்.
- கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய மசாலாப்பொருட்களை போட்டு வதக்கவும், அதன்பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி மற்றும் பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கேரமல் ஆகும் வரை வதக்கவும், இது கறியை சுவையானதாக மாற்றும்.
- அதன்பின் தக்காளியை நறுக்கியும் போடலாம் அல்லது அரைத்தும் சேர்க்கலாம். தக்காளி நன்கு வதங்கியவுடன் கொடுக்கப்பட்ட தூள் வகைகளை சரியான அளவில் சேர்த்து பச்சை வாசனை வரும் வரை கொதிக்க விடவும். உங்களுக்கு எவ்வளவு கிரேவி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- இந்த கறியில் முட்டையை முழுதாக போட்டும் சமைக்கலாம், ஆனால் முட்டையை இரண்டாக வெட்டிப் போடுவது இந்த கறியின் சுவையை மேலும் அதிகரிக்கும். குழம்பு நன்கு கொதித்து சரியான பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
இந்த சுவையான முட்டைக் கறியை இட்லி, தோசை, ஆப்பம், புரோட்டா மற்றும் புலாவ் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
