Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ரெட் சாஸ் பாஸ்தா
உங்களுக்கு பாஸ்தா ரொம்ப பிடிக்குமா? ஆனால் அதை சுவையாக செய்ய தெரியாதா? அப்படியானால் ரெட் சாஸ் பாஸ்தா செய்யுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு பாஸ்தா ரொம்ப பிடிக்குமா? ஆனால் அதை சுவையாக செய்ய தெரியாதா? அப்படியானால் ரெட் சாஸ் பாஸ்தா செய்யுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இந்த ரெட் சாஸ் பாஸ்தாவை மாலை வேளையில் பசியுடன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இது அவர்களின் பசியை தணிப்பதோடு, விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். முக்கியமாக இந்த ரெட் சாஸ் பாஸ்தா பேச்சுலர்கள் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ரெட் சாஸ் பாஸ்தா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெட் சாஸ் பாஸ்தாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (அரைத்தது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன்
* மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சீஸ் - அலங்கரிக்க தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பாஸ்தாவை வேக வைக்க வேண்டும்.
* பாஸ்தா நன்கு வெந்ததும், 3/4 கப் பாஸ்தா வேக வைத்த நீரை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, எஞ்சிய நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, பச்சை வாசனை போக குறைந்தது 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சில்லி ப்ளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப், மிளகுத் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
* பின் அதில் எடுத்து வைத்துள்ள பாஸ்தா நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் துருவிய சீஸைத் தூவினால், சுவையான ரெட் சாஸ் பாஸ்தா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
