Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து ஒரு சட்னி அரையுங்க... இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்...!
Raw Tomato Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது இட்லி அல்லது தோசையாகத்தான் இருக்கும். ;பொதுவாக இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது சட்னிதான். சட்னிகளில் பல வகைகள் உள்ளது. பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னிதான். ஆனால் தேங்காய் சட்னி போலவே மிகவும் பிரபலமான மற்றொரு சட்னி தக்காளி சட்னிதான்.
தக்காளி சட்னி பொதுவாக பழுத்த தக்காளியுடன் பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைக்கப்படும். ஆனால் பழுக்காத தக்காளியை வைத்து எப்போதாவது சட்னி அரைக்க முயற்சி செய்துள்ளீர்களா? பழுக்காத தக்காளியுடன் வேர்க்கடலை வைத்து சட்னி அரைக்கும் போது அந்த சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும். இது இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் தனித்துவமான இந்த தக்காளி சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பழுக்காத தக்காளி - 3
- வேர்க்கடலை - 2 ஸ்பூன்
- பூண்டு - 3
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - கால் கப்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- அடி கனமான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் பச்சை வேர்க்கடலையை நன்கு வறுத்து, பின்னர் ஒதுக்கி வைக்கவும். ஒருவேளை பச்சை வேர்க்கடலை இல்லையென்றால் கடையில் வாங்கிய வறுத்த வேர்க்கடலையைப் பயன்படுத்தலாம்.
- அதே பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, 4 பச்சை மிளகாயைச் சேர்க்கவும் (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்க்கலாம்). மிளகாய் தோல் தனியாக வரும் வரை வறுக்கவும்.
- அடுத்து, வாணலியில் ¼ கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து, இலைகள் சுருங்கும் வரை சுமார் ஒரு நிமிடம் வதக்கவும். இந்த கலவையை ஒரு தட்டில் மாற்றி ஒதுக்கி வைக்கவும்.
- அதே கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 2 நடுத்தர துண்டுகளாக நறுக்கிய பச்சை தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் மிக்ஸி ஜாரில் வறுத்த பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை கலவை, 3 பூண்டு பல், வறுத்த வேர்க்கடலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்ட் கிடைக்கும் வரை அரைக்கவும். ஒருவேளை தேவைப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் வறுத்த தக்காளியை, உங்கள் விருப்பத்தைப் பொறுத்து, கரடுமுரடான அல்லது மென்மையான சட்னி கிடைக்கும் வரை அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- உங்களுக்கு தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
- சூப்பரான பச்சை தக்காளி சட்னி ரெடி. இது இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications