Latest Updates
-
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்.. -
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப நெல்லிக்காயை இந்த 5 பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க
அடிக்கிற வெயிலுக்கு 1 கப் ரவை இருந்தா.. இப்படி ஒருவாட்டி வத்தல் செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Rava Vathal Recipe In Tamil: தற்போது வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் காலத்தில் பலரும் வீடுகளில் வத்தலை டப்பா டப்பாவாக செய்வார்கள். இப்படி செய்யும் வத்தலை ஒரு வருடம் வரை வைத்து சாப்பிடுவார்கள். இந்த வத்தலில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல், வெங்காய வத்தல் என பல வெரைட்டிகள் உள்ளன. பெரும்பாலும் வத்தலை செய்ய கை வலிக்க மாவை கிளறி செய்வார்கள்.
உங்கள் வீட்டிலும் அப்படி கைவலிக்க வத்தலுக்கு மாவை கிளறி செய்வீர்களா? இந்த ஆண்டு கோடையில் சிம்பிளாக ஒரு வத்தல் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் ரவா வத்தலை செய்யலாம். இந்த வத்தல் நன்கு ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். ஒருமுறை இந்த வத்தலை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் இந்த வத்தலையே செய்ய சொல்லி கேட்பார்கள்.

இந்த ரவா வத்தல் ரெசிபியை அபூர்வாஸ் நலபாகம் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த ரவா வத்தலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா வத்தல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 7 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* சீரகம் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவையை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 7 கப்
நீரை ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும்.
* நீரானது நன்கு சூடானதும், அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து,
பொடித்த ரவையை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* முக்கியமாக ரவையை சேர்த்த பின் கைவிடாமல் தொடர்ந்து 10 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* சரியான பதத்திற்கு வந்துவிட்டதை அறிய ஒரு கரண்டியை எடுத்து, அதன்
பின்பகுதியில் தொட்டு பார்க்கும் போது, மாவு விழாமல் இருந்தால்,
சரியான பதம் என்று அர்த்தம்.
* பின் அதை இறக்கி நன்கு குளிர வைக்க வேண்டும். அப்படி குளிர வைக்கும்
போது அடிக்கடி கிளறி விட வேண்டும். இதனால் மேலே ஆடை படியாமல்
இருக்கும்.
* அதன் பின் அதில் சில்லி ப்ளேக்ஸ், பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி
கொத்தமல்லி, 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய பாலிதீன் கவரை எடுத்து தரையில் விரித்து, அதில்
தயாரித்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில் எடுத்து ஊற்றி தட்டையாக அதே
சமயம் சற்று தடிமனாக அப்பளம் போன்று தேய்த்து விட வேண்டும். இதேப்
போல் அனைத்து மாவையும் சிறு சிறு அப்பள வடிவில் ஊற்றி தேய்த்து விட
வேண்டும்.
* இதை வெயிலில் 2-3 நாட்கள் நன்கு காய வைத்து எடுத்தால், சுவையான
மற்றும் மொறுமொறுப்பான ரவா வத்தல் தயார்.



Click it and Unblock the Notifications
