Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
அரை கப் ரவையும், அரை கப் கோதுமையும் இருந்தா போதும்... குழந்தைளுக்கு பிடிச்ச இந்த ஸ்வீட் பண்ணிரலாம்...!
Rava Paniyaram Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே சுவையாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்கிற ஆசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் அதற்காக எப்போதும் கடைக்கு சென்று வாங்கி கொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமானதும் அல்ல, செலவும் கட்டுப்படியாகாது. எனவே வீட்டிலேயே செய்து ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
இப்போது அடுத்த குழப்பம் என்ன ஸ்னாக் செய்து சாப்பிடலாம் என்பதுதான். வழக்கமான வடை, பஜ்ஜி செய்யாமல் வித்தியாசமாக இனிப்பு செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் ரவா இருந்தால், அதை வைத்து ஒரு சுவையான பணியாரம் செய்து கொடுங்கள். இந்த பணியாரம் செய்வது மிகவும் ஈஸி மற்றும் சுவையானதும் கூட. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
- ரவா - 1/2 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- பொடித்த வெல்லம் - 1/2 கப்
- மைதா - 1/4 கப்
- கோதுமை மாவு - 1/4 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ரவையை ஊற வைக்க வேண்டும்.
- பின் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன்பின் இந்த கலவையில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறி விட வேண்டும்.
- அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். தேங்காயை அப்படியே சேர்ப்பதற்கு பதில் நெய்யில் வறுத்து போட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- இப்பொது மாவை நன்கு கெட்டியான பதத்தில் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும், மாவை கையில் எடுத்து உருண்டையாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சூப்பரான ரவை பணியாரம் தயார்.
- இதை எண்ணெயில் பொரிக்கமால் பணியார சட்டியில் ஊற்றி வேகவைத்தும் சாப்பிடலாம்.
- மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு எளிமையான மற்றும் சூப்பாரன ஸ்னாக் ரெடி!



Click it and Unblock the Notifications
