Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
1/2 கப் ரவை இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
Rava Kichadi Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் உப்புமா என்றால் தலைத்தெறிக்க ஓடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு 1/2 கப் ரவை இருந்தால், அத்துடன் கேரட், பீன்ஸ் சேர்த்து, நெய் எல்லாம் ஊற்ற மணமணக்கும் கிச்சடியை செய்யுங்கள்.
இந்த பக்குவத்தில் கிச்சடி செய்தால் பிடிக்காவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் அத்துடன் தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிடும் போது அளவு இல்லாமல் கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ரவா கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1/2 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - 1 கப்
* நெய் - 3 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், ரவையை சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும்
வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு,
சீரகம், முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி மற்றும்
பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் தக்காளியை
சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
காய்கறிகள் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம்
மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் ரவை நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் நெய்
மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ரவா கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications