Latest Updates
-
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Hotel Style Rava Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? அதிகம் மெனக்கெடாமல் ஒரு சூப்பரான காலை டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் ரவையும், அரிசி மாவும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை சுடுங்கள். அதற்கு சைடு டிஷ்ஷாக ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த டிபன் காம்போ மிகவும் அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த டிபனை செய்வதும் மிகவும் சுலபம்.

உங்களுக்கு இந்த ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரவா தோசைக்கு...
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 1 கப்
* மைதா - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 8
* பூண்டு - 7 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, 3 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி
கலந்து மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து மாவை கலந்து விட்டு, அதில்
சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து நன்கு கலந்து, மீண்டும் 2 கப் நீரை ஊற்றி நன்கு நீர் போன்று
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
மாவை நன்கு கலந்துவிட்டு, கல்லில் அள்ளி ஊற்ற வேண்டும்.
* பிறகு மேலே எண்ணெய் ஊற்றி, தோசையின் நிறம் மாறியதும், அப்படியே
மடித்து விட்டு எடுத்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் ரவா தோசை
தயார்.
* பின்னர் சட்னி செய்வதற்கு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு, இஞ்சி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து,
தக்காளியை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து அடுப்பை அணைத்துவிட்டு,
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
