Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்..
1 கப் ரவா இருக்கா? அப்ப இந்த ஆந்திரா ஸ்பெஷல் அடை செய்யுங்க... இட்லி, தோசையை விட சூப்பரா இருக்கும்...!
Rava Adai Dosa Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது மாலை நேர உணவாக உற்பத்தி இட்லி, தோசைதான். சொல்லப்போனால் நம்மால் இட்லி, தோசை இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் வாரம் முழுக்க இவற்றையே சாப்பிட முடியாதல்லவா? இட்லி, தோசை போரடிக்கும் நேரத்தில் இடியாப்பம், பணியாரம் போன்றவற்றை செய்வோம்.
பிற டிபன்களில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவற்றை செய்ய அதிக நேரம் தேவைப்படும். எனவே குறைவான நேரத்தில் சுவையாக செய்யக்கூடிய ஒரு டிபனை நாம் கண்டறிய வேண்டும். அப்படியொரு டிபன்தான் ரவை அடை தோசை. இந்த ஆந்திரா ஸ்பெஷல் டிபனை சில நிமிடங்களில் செய்து விடலாம்.

காரமான தேங்காய் சட்னி அல்லது நாட்டுச்சர்க்கரை இதற்கு சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான ரவை அடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் ரவை
- 2 ஸ்பூன் அரிசி மாவு
- அரை கப் புளித்த தயிர்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 2 ஸ்பூன் துருவிய கேரட்
- நறுக்கிய பச்சை மிளகாய்(தேவைப்பட்டால்)
- 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் நறுக்கிய கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
- ரவாவுடன் அரிசி மாவு, புளிப்பான தயிர், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்குக் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- தேவைப்பட்டால் ரவையை வறுத்தும் அதனுடன் பிற பொருட்களை சேர்க்கலாம்.
- 30 நிமிடங்களுக்குப் பிறகு, நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து, இட்லி மாவின் நிலைத்தன்மைக்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
- உங்களுக்கு காரம் தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாயை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- மாவு ரெடியானதும் ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மாவை ஊத்தாப்பம் போல ஊற்றி அடையை சுற்றி எண்ணெயை ஊற்றவும்.
- அடை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் தோசைக்கல்லில் இருந்து தட்டுக்கு மாற்றவும்.
- சூடான ரவை அடை ரெடி. இதை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும். விருப்பப்பட்டால் நாட்டு சர்க்கரை வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
