Latest Updates
-
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள் -
ராகு-கேது தோஷம் நீங்கணுமா? அப்ப நாக பஞ்சமி அன்று உங்க ராசிக்கேற்ப இந்த பரிகாரங்களை செய்யுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
நாக பஞ்சமியில் நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளின் பணக்கஷ்டம் தீர்ந்து, பண வரவு அதிகரிக்கப்போகுது!
அடுத்தமுறை ரசத்தை இப்படி செய்யுங்க... வீடும் மணக்கும் தட்டு சோறும் காலியாகும்..
Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் செய்வீர்களா? எப்படி ரசம் செய்தாலும் அந்த ரசம் சுவையாக இருப்பதில்லையா? ஒரு நாள் நன்றாக வைத்தால், அடுத்த நாள் சொதப்பிவிடுகிறதா? அப்படியானால் அடுத்தமுறை ரசம் செய்வதாக இருந்தால், கீழே கொடுத்துள்ளவாறு செய்யுங்கள். இப்படி ரசம் செய்யும் போது, அந்த ரசம் சுவையாக இருப்பதோடு, வீடே மணக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் ரசம் செய்தால், ஒரு தட்டு சோறு டக்கென்று காலியாகிவிடும். அந்த அளவில் அதன் சுவையும், மணமும் இருக்கும்.
உங்களுக்கு நல்ல சுவையான ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* வரமல்லி - 1 டீஸ்பூன்
* மளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 7
* வரமிளகாய் - 1
* பூண்டு - 7-8
ரசத்திற்கு...
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* பெரிய தக்காளி - 1
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள மல்லி, சீரகம்,
மிளகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து ஒருமுறை பொடித்துக் கொள்ள
வேண்டும். பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து ஒருமுறை அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஊற வைத்துள்ள புளியை கைகளால் நன்கு பிசைந்து, வடிகட்டி ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்த்து கைகளால் தக்காளியை நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்ததை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் புளி கரைசலை
ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து, ரசத்தில்
நுரைகட்ட தொடங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ரசம் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications