Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ராகி உப்புமாவும், நீர் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.
Ragi Upma With Coconut Chutney In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு ராகி உப்புமாவை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் இந்த உப்புமாவிற்கு நீர் தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். ஒருமுறை இந்த காம்பவை செய்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். முக்கியமாக இந்த காம்போ செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு ராகி உப்புமாவும், தேங்காய் சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி உப்புமா மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சட்னிக்கு...
* சிறிய அளவிலான தேங்காய் - 1/4 மூடி
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 3
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
உப்புமாவிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* ரவை - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, பொட்டுக்கடலை,
பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி ஓரளவு
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியுடன் சற்று அதிகமாக நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள், வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த சட்னியை ஊற்றி கிளறி அடுப்பை அணைத்துவிட்டால்,
சுவையான நீர் சட்னி தயார்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி,
அத்துடன் நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் ராகி மாவை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 4 கப் நீரை ஊற்றி கிளறி, முதலில் மிதமான தீயில்
வைத்து மூடி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விட்டு, மீண்டும் மூடி
வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ராகி உப்புமாவும்,
தேங்காய் நீர் சட்னியும் தயார்



Click it and Unblock the Notifications











