Latest Updates
-
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க..
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
Ragi Pachai Payaru Sweet Kozhukattai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகளுக்கு சத்தான அதே சமயம் வயிறு நிரம்பும்படியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு கொழுக்கட்டை என்றால் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் ராகி மாவும், பச்சை பயறும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டையில் நார்ச்சத்து மட்டுமின்றி, புரோட்டீனும் இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு இந்த கொழுக்கட்டையை அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது.

உங்களுக்கு இந்த ராகி பச்சை பயறு இனிப்பு கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பச்சை பயறு இனிப்பு கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* பச்சை பயறு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
கொழுக்கட்டைக்கு...
* ராகி மாவு - 2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த பச்சைப்பயறு
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரில் பச்சை பயறை எடுத்துக் கொண்டு நீரில் 2 முறை
கழுவி, பின் அதில் 2 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து,
மிதமான தீயில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள அதிகப்படியான நீரை
வடிகட்டி அகற்றிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் ராகி மாவை எடுத்துக் கொண்டு, அதில்
1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, புட்டு மாவு பதத்திற்கு
கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு இட்லி தட்டில் துணியை விரித்து, அதில் இந்த ராகி மாவை
சேர்த்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 10-15 நிமிடம் வேக வைத்து
எடுக்க வேண்டும்.
* பின்னர் ஒரு தட்டில் வேக வைத்த ராகி மாவை எடுத்துக் கொண்டு, அதில்
உள்ள கட்டிகளை கைகளால் உடைத்து நன்கு உதிர்த்து விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய், ஏலக்காய் தூள், நெய், வேக வைத்த
பச்சை பயறு மற்றும் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கைகளால்
நன்கு கிளறி விட வேண்டும். இது அனைத்தையும் மாவு சூடாக இருக்கும் போதே
செய்து விட வேண்டும்.
* இறுதியாக அந்த மாவை உருண்டைகளாக பிடித்தால், சுவையான மற்றும் சத்தான
ராகி பச்சை பயறு இனிப்பு கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
