Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தினமும் காலையில் இத 1 கப் சாப்பிடுங்க.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமா கரைஞ்சி குச்சியாயிடுவீங்க...
Ragi Kara Puttu Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? சற்று உடலுக்கு வலுசேர்க்கும் மற்றும் உடல் கொழுப்பைக் கரைக்கும் காலை உணவுகளை சாப்பிட வேண்டுமா? அப்படியானால் அடிக்கடி ராகியை சேர்க்கலாம். ராகியைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். அதுவும் ராகி மாவைக் கொண்டு கார புட்டு அல்லது இனிப்பு புட்டு செய்யும் போது, சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும்.
ராகியில் கால்சியம் அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு வலுவூட்டும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடையைக் குறைக்க நினைப்போர் ராகியை தினசரி உணவில் சேர்த்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறைய உதவி புரியும். முக்கியமாக இந்த ராகி புட்டுவை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம். இதனால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

உங்களுக்கு கார ராகி புட்டு மற்றும் இனிப்பு ராகி புட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார ராகி புட்டு மற்றும் இனிப்பு ராகி புட்டுவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
கார ராகி புட்டுவிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* உப்பு - சிறிது
இனிப்பு ராகி புட்டுவிற்கு...
* தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
* நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - சுவைக்கேற்ப
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி புட்டு மாவு பதத்திற்கு
திரித்திரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை 1/4 கப் சேர்த்து கைகளால் கிளறி
விட வேண்டும்.
* அடுத்து இட்லி தட்டை எடுத்து, அதன் மேல் எண்ணெய் தடவி, இந்த புட்டு
மாவை வைக்க வேண்டும்.
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து, மூடி வைத்து 15
நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பிறகு அதை இரண்டு பாத்திரத்தில் பிரித்து எடுத்துக்
கொள்ளுங்கள்.
* நீங்கள் கார ராகி புட்டு செய்யப் போகிறீர்கள் என்றால், இதில் ஒரு
ராகி புட்டுவை எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 1 டீஸ்பூன்
ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் வேர்க்கடலையை ஒரு கைப்பிடியை சேர்த்து 1 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் செய்து வைத்துள்ள ஒரு பாதி ராகி புட்டுவை சேர்த்து நன்கு
கிளறி இறக்கினால், சுவையான கார ராகி புட்டு தயார்.
* அதுவே நீங்கள் இனிப்பு ராகி புட்டு செய்ய வேண்டுமானால், மற்றொரு
பாதி ராகி புட்டுவை எடுத்து, அத்துடன் துருவிய தேங்காய்,
நாட்டுச்சர்க்கரை, வேர்க்கடலை மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து
கிளறினால், இனிப்பு ராகி புட்டு தயார்.



Click it and Unblock the Notifications








