ருசியான... ராகி அல்வா

ராகி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. உடலுக்கு வலிமையளிக்கக்கூடியது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்வா பிடிக்குமானால், அவர்களுக்கு இன்று ராகி அல்வா செய்து கொடுங்கள்.

Posted By:

மாலை வேளையில் உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையான ஒரு ஸ்வீட் செய்ய நினைத்தால், ராகி அல்வாவை செய்யலாம். ராகி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. உடலுக்கு வலிமையளிக்கக்கூடியது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அல்வா பிடிக்குமானால், அவர்களுக்கு இன்று ராகி அல்வா செய்து கொடுங்கள்.

Ragi Halwa Recipe In Tamil

இது நிச்சயம் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும். இப்போது ராகி அல்வாவை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: தேங்காய் பாயாசம்

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு - 1/2 கப்

* நெய் - 4 டேபிள் ஸ்பூன்

* சூடான பால் - 1 கப்

* சர்க்கரை - 1/4 கப்

* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

அலங்கரிக்க...

* பாதாம் - 6-7 (பொடியாக நறுக்கியது)

* பிஸ்தா - 6- (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/2 கப் ராகி மாவை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் கெட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை உருக கிளறி விடவும்.

* பிறகு அதில் 1 கப் நன்கு சூடான பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். பால் சேர்த்த பின் கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும்.

* எப்போது வாணலியில் ஒட்டாத பதத்தில் கலவை வருகிறதோ, அப்போது 1/4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து அலங்கரித்தால், சுவையான ராகி அல்வா ரெடி!!!

Image Courtesy

[ of 5 - Users]
Story first published: Monday, September 7, 2020, 17:35 [IST]
Desktop Bottom Promotion