Latest Updates
-
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம்
காலையில் ஒருமுறை ராகி சப்பாத்தி செஞ்சு.. இந்த ஹோட்டல் ஸ்டைல் கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்..
Ragi Chapati With Potato Gravy Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை என்று செய்யாமல், ஒருமுறை வீட்டில் ராகி மாவு இருந்தால், அதைக் கொண்டு சப்பாத்தி செய்து, அதற்கு ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கிரேவியை செய்யுங்கள்.
இந்த காம்பினேஷன் நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்குமே பிடிக்கும். இன்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்த ரெசிபியை செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ராகி சப்பாத்திக்கு ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி சப்பாத்தி மற்றும் ஹோட்டல் ஸ்டைலில் உருளைக்கிழங்கு கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி சப்பாத்திக்கு...
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* ராகி மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு கிரேவிக்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி,
அதில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ராகி மாவை சேர்த்து, கரண்டியால் நன்கு
4-5 நிமிடம் கிளறி விட்டு இறக்கி மூடி வைத்து, ஒரு 5-10 நிமிடம் ஊற
வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது மாவு நன்கு அந்த சூட்டிலேயே
வெந்து, சப்பாத்தி நன்கு சாப்ட்டாக வரும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு,
சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் தயிரை நன்கு ஒருமுறை அடித்துவிட்டு சேர்த்து கிளறி, 2 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளாலேயே நன்கு மசித்து
விட்டு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.
* அடுத்து ஊற வைத்துள்ள ராகி மாவை கைகளால் நன்கு 5 நிமிடம் பிசைந்து
விட வேண்டும்.
* பின் பிசைந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, ராகி மாவில் பிரட்டி,
சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தேய்க்கும் போது
மேலே சிறிது ராகி மாவை தூவி விட்டு தேய்த்து விடுங்கள். இதனால்
தேய்ப்பதற்கு சுலபமாக இருக்கும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்த ராகி
சப்பாத்தியைப் போட்டு 2 நொடிகள் கழித்து சப்பாத்தியைத் திருப்பிப்
போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் சப்பாத்தியாக சுட்டு எடுத்துக் கொண்டால்,
சுவையான ராகி சப்பாத்தி தயார்.
Image Courtesy: Hyderabadi Ruchulu



Click it and Unblock the Notifications