Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
குழந்தைகளுக்கு பிடித்த ராகி பிஸ்கட் ரெசிபி... ஓவன் இல்லாம வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்... ட்ரை பண்ணுங்க...!
பொதுவாகவே குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் பெற்றோர்களுக்கு பிஸ்கட் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமோ என்கிற பயம் இருக்கும். அதனாலேயே பெரும்பாலான பெற்றோர் அதை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்வார்கள். என்னதான் முயற்சி செய்தாலும் கடைசியில் குழந்தையின் பிடிவாதம் தான் வெற்றி பெறும்.
இப்படி கவலைப்படும் பெற்றோருக்கு குழந்தைக்கு ஆரோக்கியமான பிஸ்கட் கொடுக்க வழி தெரிந்தால் மகிழ்ச்சியாக தானே இருக்கும். ஆம், நாம் இன்று குழந்தைகளுக்கான ஆரோக்கியமான பிஸ்கட்டை ஓவென் இல்லாமல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பாதம் - 10
- முந்திரி - 20
- நிலக்கடலை - ¼ கப்
- பிஸ்தா - 10
- வால்நட் - 5
- வெண்ணெய் - ½ கப்
- நாட்டு சர்க்கரை - ½ கப்
- ராகி மாவு - 1 கப்
- பேக்கிங் சோடா - ஒரு பின்ச்
- ஏலக்காய் - 3
- பால் - ¼ கப்
- உப்பு - ¼ டீ ஸ்பூன்
பேக்கிங் செய்ய:
- அகலமான பாத்திரம் மூடியுடன்
- பிரஷர் குக்கர் ஸ்டாண்ட்
- கல் உப்பு
- பால் பாக்கெட் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பர்
செய்முறை:
- பாதம் பருப்பை 3-4 மணி நேரம் நன்றாக ஊற வைத்து தோல் நீக்கி
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நிலக்கடலையை லேசாக கருகாமல் வறுத்து தோல்
நீக்கி வைத்து கொள்ளவும்.
- அடுத்து வாணலியில் பாதம், முந்திரி, பிஸ்தா, வால்நட் சேர்த்து
மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.
- பின் ராகி மாவை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறாமல்
வறுத்து கொள்ளவும்.
- வறுத்த ராகி மாவை தனியே ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.
- நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக
அரைத்து கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் வெண்ணை எடுத்து நன்றாக அடித்து
கொள்ளவும்.
- அதனுடன் நாட்டு சர்க்கரை ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கலந்து
கொள்ளவும்.
- பின் மிக்ஸி ஜாரில் பாதம், முந்திரி, பிஸ்தா, வால்நட், தோல் நீக்கிய
நிலக்கடலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்ததை நன்றாக சலித்து வெண்ணை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து
கலக்கவும்.
- சலித்ததில் மீதம் இருப்பவற்றை மீண்டும் அரைத்து சலித்து சேர்த்து
கொள்ளவும்.
- வறுத்து ஆற வைத்த ராகி மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் உப்பு
சேர்த்து நன்றாக சலித்து வெண்ணை நாட்டுசர்க்கரை கரைசலில்
சேர்க்கவும்.
- அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து கெட்டியாக கலந்து
கொள்ளவும்.
- பின் பைப்பிங் பேக் அல்லது பால் கவரின் நுனியை வெட்டி தயார் செய்து
கொள்ளவும்.
- அகலமான அடி கனமான பாத்திரத்தின் அடி பகுதியில் உப்பு சேர்த்து அதன்
மீது ஸ்டாண்டை வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- பின் ஒரு தட்டில் பட்டர் அல்லது நெய் தடவவும்.
- பின் இந்த கலவையை பால் கவரில் வைத்து நீங்கள் விரும்பும் வடிவத்தில்
கொஞ்சம் தடிமனாக நெய் தடவிய பிஸ்கட் போல போடவும்.
- பின் தட்டை வாணயில் வைத்து 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால்
சுவையான ராகி பிஸ்கெட் ரெடி!



Click it and Unblock the Notifications








