Latest Updates
-
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம்
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் முள்ளங்கி கூட்டு
உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த முள்ளங்கி கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, புளிக்குழம்பிற்கு சைடு டிஷ்ஷாகவும் அற்புதமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக மசாலா செய்து அலுத்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த முள்ளங்கி கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, புளிக்குழம்பிற்கு சைடு டிஷ்ஷாகவும் அற்புதமாக இருக்கும். முள்ளங்கி கூட்டு என்றதும் பலர் அதன் வாசனையை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த கூட்டில் முள்ளங்கியை நன்கு வதக்கி செய்வதால், வாசனை அதிகம் வராது.

உங்களுக்கு முள்ளங்கி கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முள்ளங்கி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பாசிப் பருப்பு - 1/2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, நீரை ஊற்றி வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முள்ளங்கியை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி, முள்ளங்கியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* முள்ளங்கி நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, முள்ளங்கி கூட்டுடன் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி கூட்டு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
