Latest Updates
-
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Chettinad Kalyana Brinji In Tamil: புரட்டாசி விரதம் இருப்பவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் சற்று ஸ்பெஷலாக சமைத்து சாப்பிட நினைக்கலாம். அப்போது காளானைக் கொண்டு ஸ்பெஷல் பிரியாணியை செய்வதற்கு பதிலாக, செட்டிநாடு கல்யாண பிரிஞ்சியை செய்து சாப்பிடுங்கள். இந்த பிரிஞ்சி வழக்கமாக செய்யும் பிரிஞ்சி சுவையில் இல்லாமல், சற்று வித்தியாசமாகவும், வீடே மணக்கும் வகையிலும் இருக்கும். சொல்லப்போனால் இந்த பிரிஞ்சியை செய்தால் அசைவ உணவின் நினைப்பே வராது.

உங்களுக்கு இந்த செட்டிநாடு கல்யாண பிரிஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (நறுக்கியது)
* பட்டாணி - 1/4 கப்
* மீல் மேக்கர் - 100 கிராம் (சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து
பிழிந்தது)
* பிரியாணி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - சிறிது
* பாசுமதி அரிசி - 3 கப் (15 நிமிடம் ஊற வைத்தது)
* சுடுநீர் - 4 1/2 கப்
* தேங்காய் பால் - 100 மிலி
* பிரட் துண்டுகள் - சிறிது (நெய்யில் வறுத்தது)
* முந்திரி - சிறிது (நெய்யில் வறுத்தது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,
துருவிய தேங்காய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை
சேர்த்து முதலில் லேசாக அரைத்து, பின் சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாசுமதி அரிசியை கழுவி, சுத்தமான நீரை ஊற்றி, 15 நிமிடம் ஊற
வைக்க வேண்டும். அதேப் போல் மீல் மேக்கரை சுடுநீரில் 5 நிமிடம் ஊற
வைத்து, குளிர்ந்த நீரில் 2 முறை கழுவிவிட்டு, அதில் உள்ள
அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி, மீல் மேக்கரை சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பிரியாணி மசாலா மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து
கிளறி, சிறிது நீரை ஊற்றி, லேசாக மூடி வைத்து, 3 நிமிடம் காய்கறிகளை
வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து,
4 1/2 கப் கொதிக்கும் சுடுநீரை ஊற்றி கலந்து கொதிக்க ஆரம்பித்ததும்,
கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, நீர் ஓரளவு வற்றியதும், குக்கரை
மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் நெய்யில் வறுத்த பிரட்
துண்டுகள் மற்றும் முந்திரியை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம்
கழித்து, மூடியைத் திறந்தால், மணமணக்கும் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
