Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
புதினா தக்காளி சட்னியை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. அட்டகாசமா இருக்கும்...
Pudina Thakkali Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சற்று புளிப்பான அதே சமயம் சத்தான குளிர்ச்சியான ஒரு சட்னியை செய்ய வேண்டுமா?
அப்படியானால் வீட்டில் புதினாவும், தக்காளியும் இருந்தால், அதைக் கொண்டு புதினா தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். முக்கியமாக வேலைக்கு செல்வோர் மற்றும் பேச்சுலர்களுக்கு ஏற்ற ஈஸியான சட்னி இது.

உங்களுக்கு புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 4
* பெரிய தக்காளி - 2
* புதினா - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். வரமிளகாய் நன்கு உப்பி
வந்துவிட்டால், வரமிளகாய் வறுபட்டுவிட்டது என்று அர்த்தம்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு 2 கைப்பிடி அளவு புதினாவை எடுத்து நீரில் அலசி, தக்காளியுடன்
சேர்த்து ஒரு 20 நொடிகள் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து, மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். நீர்
சேர்க்க தேவையில்லை.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
எண்ணெயுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா தக்காளி சட்னி
தயார்.
Image Courtesy: Mana Chef



Click it and Unblock the Notifications