Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
இறாலை வைச்சு இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் தொக்கு செய்யுங்க... சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமா இருக்கும்...
Prawn Thokku Recipe in Tamil: அசைவ உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியமானது எதுவென்றால் அது கடல் உணவுகள்தான். பொதுவாக மீன்கள் சாப்பிட சுவையானதாக இருந்தாலும் அதிலிருக்கும் முள் பெரும்பாலும் அதை சாப்பிடுவதை அசௌகரியமானதாக மாற்றுகிறது. குறிப்பாக குழந்தைகள் மீன் சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு காரணமே அதிலிருக்கும் முட்கள்தான்.
எனவே கடல் உணவுகளின் சுவையையும், ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு இறால் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். இறால் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கடல் உணவாகும். பொதுவாக இறாலை மக்கள் வறுத்து மட்டும்தான் சாப்பிடுவார்கள். ஆனால் இறாலை ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்து சாப்பிடுவது வேற லெவலில் இருக்கும்.

இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் தொக்கை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், இட்லி, தோசை போன்றவற்றுக்கும் சைடிஷாக வைத்து சாப்பிடலாம். காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் தொகை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) - அரை கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய தக்காளி - 2
- இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - இரண்டு ஸ்பூன்
- மிளகு தூள் - 1 ஸ்பூன்
- சோம்பு - ஒரு ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - சிறிதளவு
- நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- கரம் மசாலா - ஒன்றரை ஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கவும்.
- அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.
- சூடான சாதத்துடன் இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் தொக்கை சாப்பிட அட்டகாசமான காம்பினேஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
