Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Prawn Kuzhambu : இறால் குழம்பு
சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு இறால் குழம்பு எளிய முறையில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 1 கப் (சுத்தம் செய்தது)
* சின்ன வெங்காயம் -10
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 5
* கிராம்பு - 3
* பட்டை - 1/4 இன்ச்
* தேங்காய் - 1/8 கப்
* தக்காளி - 1 (சிறியது)
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும், தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் சுத்தம் செய்த இறாலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இறால் நன்கு சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* இறால் ஏற்கனவே நீர் விடும் என்பதால், 1/4-1/2 கப் நீரை ஊற்றி, இறாலை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இறால் குழம்பு தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
