Latest Updates
-
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க..
இட்லிக்கு ஒருடைம் இந்த கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Kaiyendhi Bhavan Pottukadalai Sambar Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு தினமும் என்ன சைடுடிஷ் செய்வதென்று யோசிப்பீர்களா?
அப்படியானால் ஒருமுறை அதற்கு கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் பொட்டுக்கடலை சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 3
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - சிறிது
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மஞ்சள் தூள், குழம்பு
மிளகாய் தூள், சாம்பார் தூள், பெருங்காயத் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு
மற்றும் அவை அனைத்தும் மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை மட்டும்
வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு லேசாக ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பொட்டுக்கடலையை அரைத்து பொடி செய்து, அத்துடன் அரிசி
மாவையும் சேர்த்து, நீர் ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி
ஒரு கொதி விட வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை கலவையை ஊற்றி, தனியாக
எடுத்து வைத்துள்ள மசாலா நீரை ஊற்றி கிளறி, வெல்லம், பெருங்காயத் தூள்
மற்றும் சாம்பார் தூள் சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லி மற்றும் நெய் ஊற்றி கிளறினால், சுவையான கையேந்தி பவன்
பொட்டுக்கடலை சாம்பார் தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications