Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
வீட்டுல தேங்காய் இல்லையா? பொட்டுக்கடலை மட்டும் தான் இருக்கா? இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்...
Pottukadalai Chutney Recipe In Tamil: உங்க வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை செய்யப் போறீங்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சட்னியைத் தான் உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா?
உங்கள் வீட்டில் சட்னி செய்வதற்கு தேங்காய் இல்லையா? தேங்காய் இல்லாமல் எப்படி சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த பொட்டுக்கடலையைக் கொண்டே அட்டகாசமான சட்னியை செய்யலாம்.

இந்த பொட்டுக்கடலை சட்னிக்கு தேங்காய் எதுவும் தேவையில்லை, வெங்காயமும், காரத்திற்கு பச்சை மிளகாயும், புளிப்புச் சுவைக்கு புளி ஒரு சிறிய துண்டும் இருந்தால் போதுமானது.
இந்த பொட்டுக்கடலை சட்னி காலையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பொட்டுக்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2-3
* பூண்டு - 3-4 பல்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை சேர்த்து மிதமான தியில் வைத்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
பொட்டுக்கடலை, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
Image Courtesy: cookingfromheart



Click it and Unblock the Notifications
