வீட்டுல தேங்காய் இல்லையா? பொட்டுக்கடலை மட்டும் தான் இருக்கா? இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்...

Posted By:

Pottukadalai Chutney Recipe In Tamil: உங்க வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசை செய்யப் போறீங்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சட்னியைத் தான் உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா?

உங்கள் வீட்டில் சட்னி செய்வதற்கு தேங்காய் இல்லையா? தேங்காய் இல்லாமல் எப்படி சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த பொட்டுக்கடலையைக் கொண்டே அட்டகாசமான சட்னியை செய்யலாம்.

Pottukadalai Chutney Recipe

இந்த பொட்டுக்கடலை சட்னிக்கு தேங்காய் எதுவும் தேவையில்லை, வெங்காயமும், காரத்திற்கு பச்சை மிளகாயும், புளிப்புச் சுவைக்கு புளி ஒரு சிறிய துண்டும் இருந்தால் போதுமானது.

இந்த பொட்டுக்கடலை சட்னி காலையில் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு பொட்டுக்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே பொட்டுக்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2-3
* பூண்டு - 3-4 பல்
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை சேர்த்து மிதமான தியில் வைத்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை, புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.

Image Courtesy: cookingfromheart

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 29, 2023, 7:33 [IST]
Desktop Bottom Promotion