Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் பொட்டுக்கடலை இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. வாயில் வெச்சதும் கரையும்..
Pottukadalai Burfi Recipe In Tamil: தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். வீட்டிலேயே குழந்தைகள் இருப்பதால், எப்போதும் சாப்பிட ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அப்போது எந்நேரமும் கடைகளில் வாங்கிக் கொடுத்தால், பணம் அதிகம் செலவாவதோடு, ஆரோக்கியமும் பாழாகும்.
இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே சுவையான ஸ்நாக்ஸ்களை செய்து கொடுத்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள், அவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் கடைகளில் விற்கப்படும் ஸ்நாக்ஸ்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை விட, வீட்டில் செய்து கொடுத்தால், எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள் மற்றும் அவர்களும் கடைகளில் எதையும் வாங்கிக் கொடுக்க கேட்கமாட்டார்கள்.

சரி, அப்படி திடீரென்று உங்கள் பிள்ளைகள் ஸ்வீட் கேட்டால், என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் 1 கப் பொட்டுக்கடலை இருந்தால், அந்த பொட்டுக்கடலைக் கொண்டு பர்ஃபியை செய்து கொடுங்கள். இந்த பர்ஃபி மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
இந்த பொட்டுக்கடலை பர்ஃபியை ஒருமுறை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இது சுவையாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு பொட்டுக்கடலை பர்ஃபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை பர்ஃபி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 கப்
* சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் - 2
* நெய் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் பொட்டுக்கடலையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 ஏலக்காய் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து பொடி
செய்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சல்லடையை வைத்து, அதில் அரைத்த பொடியை
சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3/4 கப் நெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், அடுப்பை அணைத்துவிட்டு, அதில் அரைத்து சலித்து
வைத்துள்ள பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து கரண்டியால் கிளறி விட
வேண்டும்.
* கலவையானது நன்கு பேஸ்ட் போல் மாறியதும், ஒரு கிண்ணத்தில் நெய் தடவி,
அதில் வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.
* பின் அதை நன்கு குளிர வைக்க வேண்டும்.
* நன்கு குளிர்ந்ததும், கத்தியால் விரும்பிய வடிவத்தில் வெட்டினால்,
சுவையான பொட்டுக்கடலை பர்ஃபி தயார்.



Click it and Unblock the Notifications