Latest Updates
-
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Urulai Kizhangu Gothumai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? மாவு அரைக்க மறந்துவிட்டீர்களா? என்ன டிபன் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தோசை தான் ரொம்ப பிடிக்குமா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்து கொடுங்கள். இந்த கோதுமை தோசை வழக்கமாக சாப்பிடும் கோதுமை தோசை போன்று இல்லாமல், உருளைக்கிழங்கின் ப்ளேவருடன் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தோசைக்கு கார சட்னி, தேங்காய் சட்னி போன்றவை பொருத்தமானதாக இருக்கும்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு கோதுமை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 2 அல்லது 300 கிராம்
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் 2 பெரிய உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில்
துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும்
பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லியை
சேர்த்து, மிளகாய் தூளை தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது
தோசை மாவு தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் ஓரளவு சூடானதும்,
மிதமான தீயில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய தோசையாக ஊற்றி,
மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து
எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு கோதுமை தோசை தயார்.



Click it and Unblock the Notifications
