Latest Updates
-
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்
1 கப் கோதுமை மாவை வெச்சு காலையில் இப்படியொரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க..
Potato Stuffed Egg Paratha Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை-ன்னு செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான மற்றும் புதுமையான ரெசிபிக்களை செய்யுங்கள். இதனால் வீட்டில் உள்ளோர் காலை உணவை தவறாமல் சாப்பிடுவதோடு, விரும்பியும் சாப்பிடுவார்கள்.
அப்படியான ஒரு புதுமையான ரெசிபியைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த புதுமையான கோதுமை மாவு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* எள்ளு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
பிரட்டி எடுப்பதற்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சிறி
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, மிளகாய் தூள்,
மல்லித் தூள், மஞ்சள் தூள், எண்ணெய் ஊற்றி, கைகளால் கிளறி, பின்
சிறிது நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம்
மூடி வைத்து ஊற வைத்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்
தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு,
சீரகம், எள்ளு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
சிறிது, எலுமிச்சை சாறு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, அதை தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ஒரு துண்டு மாவை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பதை விட
சற்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் நடுவே சிறிது உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சமமாக பரப்பி
விட வேண்டும்.
* பிறகு ஒரு பக்க மாவை உருளைக்கிழங்கு கலவை வெளியே வராமல் இருக்க
சிறிது மடித்து விட வேண்டும். அதேப் போல் எதிர் பக்க மாவையும் சிறிது
மடித்து விட வேண்டும்.
* அடுத்து மீதமுள்ள மற்ற இரு எதிர்ரெதிர் பகுதிகளையும் சிறிது மடித்து
விட்டு, பின் நீள் செவ்வக வடிவில் மடித்து லேசாக அழுத்தி விட
வேண்டும். இதனால் உருளைக்கிழங்கு மசாலா வெளியே வராமல் இருக்கும்.
* பின் கத்தியைக் கொண்டு சற்று பெரிய சதுரத் துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று மற்றொரு உருண்டையையும் செய்ய
வேண்டும்.
* அடுத்து இட்லி பாத்திரத்தில் இந்த துண்டுகளை வைத்து 10 நிமிடம் வேக
வைத்து இறக்கி நன்கு குளிர்ந்த பின் எடுக்க வேண்டும். சூடாக இருக்கும்
போது எடுத்தால் உடைந்துவிடும்.
* பின்னர் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு,
மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,
வேக வைத்துள்ள துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, முட்டை கலவையில்
பிரட்டி, தவாவில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால்,
சுவையான ப்ரேக் ஃபாஸ்ட் தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications








