Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
1 உருளைக்கிழங்கும், 1/2 கப் ரவையும் இருந்தா.. காலையில சட்டு-ன்னு இந்த டிபனை செய்யுங்க.. செமயா இருக்கும்..
Potato Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், ரவையும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்.
இந்த உருளைக்கிழங்கு ரவா தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இந்த தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். அதுவும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். அதுவும் கீழே கொடுத்துள்ளவாறு தேங்காய் சட்னியை செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கப்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள்
* தயிர் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் பெரிய உருளைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை எடுத்து, அத்துடன்
கோதுமை மாவு, ரவை, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, சில்லி ப்ளேக்ஸ், எலுமிச்சை
சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும்
சீரகம் சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதற்குள் தோசைக்கு அருமையான சட்னியை செய்யலாம். அந்த சட்னிக்கு
மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், தயிர், இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சட்னி தயார்.
* இறுதியாக ஊற வைத்துள்ள மாவை நன்கு கலந்து விட வேண்டும். பின்
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, கல் சூடானதும், ஒரு டம்ளரில் மாவை
எடுத்து, கல்லில் பரவலாக சுற்றி ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் ஊற்றி,
தோசை நன்கு பொன்னிறமாக வெந்ததும், அப்படியே தோசையை மடித்து எடுத்தால்,
சுவையான உருளைக்கிழங்கு ரவா தோசை தயார்.



Click it and Unblock the Notifications