Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
வீட்ல உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி ஸ்னாக் செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Potato Poppers Recipe in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த காய்கறி என்றால் அது உருளைக்கிழங்குதான். பொரியல், சிப்ஸ், குழம்பு என உருளைக்கிழங்கை எப்படி சமைத்தாலும் சுவையாகத்தான் இருக்கும். இப்போது கோடை விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
இந்த சூழ்நிலையில் உருளைக்கிழங்கை வைத்து அவர்களுக்கு ஏதாவது தின்பண்டம் செய்து கொடுப்பது குழந்தைகளுக்கு பிடித்ததாக இருப்பதுடன் செலவும் குறைவானதாகவே இருக்கும். உருளைக்கிழங்கை வைத்து சிப்ஸ் மட்டுமே செய்து கொடுக்காமல் வித்தியாசமாக பாப்பர்ஸ் செய்து கொடுங்கள். இதன் சுவை மட்டுமின்றி வடிவமே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து எப்படி பாப்பர்ஸ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 கப்
- மைதா மாவு - கால் கப்
- நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 ஸ்பூன்
- நறுக்கிய புதினா - 2 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
- சர்க்கரை - 2 ஸ்பூன்
- பேக்கிங் சோடா - ஒரு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தேவையான அளவு தயாராக எடுத்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்குடன் மைதா, கொத்தமல்லி, புதினா, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பிற பொருட்களை எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிறகு சப்பாத்திப் பலகையில் சிறிது மாவு தூவி உருளைக்கிழங்கு கலவையை நீளமான ரோல் போல உருட்டிக் கொள்ளவும்.
- உருட்டி வைத்துள்ள ரோலை கத்தியால் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய துண்டுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
- மொறுமொறுப்பான சுவையான பொட்டேட்டோ பாப்பர்ஸ் தயார். இதை கெச்சப் அல்லது விரும்பிய சாஸுடன் சாப்பிடலாம்.
- ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் இல்லையென்றால் ஒரு காய்ந்த மிளகாயை மிக்ஸியில் பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
