Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப வீடே மணக்குற அளவு 10 நிமிஷத்துல இந்த பிரியாணியை செய்யுங்க..
Potato Peas Biryani Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? டக்கென்று ஒரு சமையலை செய்து மதியம் சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பட்டாணியும் இருந்தால், இந்த பிரியாணியை 10 நிமிடத்தில் செய்யுங்கள்.
இந்த பிரியாணியானது செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இதை காலையில் செய்து ஸ்கூலுக்கு டிபன் பாக்ஸில் வைத்தும் கொடுக்கலாம். இப்படி வைத்துக் கொடுத்தால், டிபன் பாக்ஸ் காலியா தான் வரும். அந்த அளவில் மிகவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
மசாலாவிற்கு..
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 6-7
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
பிரியாணிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 3
* பட்டை - சிறு துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1
* பச்சை பட்டாணி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் பால் - 2 கப்
* தண்ணீர் - 1 கப்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, பின் அதில்
தேவையான அளவு நீரை ஊற்றி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை, சோம்பு,
சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து,
நன்கு 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 கப் தேங்காய் பால் மற்றும் 1 கப் நீரை ஊற்றி கிளறி,
கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்ததும், அதில் பாசுமதி அரிசியில் உள்ள நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மேலே சிறிது பொடியாக நறுக்கிய புதினா
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, உயர் தீயில்
வைத்து ஒரு விசிலும், குறைவான தீயில் வைத்து ஒரு விசிலும் விட்டு
இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான உருளைக்கிழங்கு
பட்டாணி பிரியாணி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications











