Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இட்லிக்கு இந்த குருமாவை ஒருவாட்டி செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...
Potato Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை குருமாவை செய்யுங்கள். அதுவும் உருளைக்கிழங்கு கொண்டு குருமா செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா காலையில் சட்டென்று செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 5 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 1
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* இஞ்சி - 2 துண்டு
* பூண்டு - 5 பல்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, பட்டை,
ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 2
பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை
சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சோம்பு, கசகசா,
பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வாணலியில் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, உப்பு சுவை
பார்த்து, மிதமான தீயில் வைத்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.



Click it and Unblock the Notifications