Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
அடுத்தமுறை உருளைக்கிழங்கு ப்ரைக்கு இப்படி 1 பொடி அரைச்சு செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்...
Pudhu Potato Fry Recipe In Tamil: காய்கறிகளில் பெரும்பாலானோரின் விருப்பமான காய்கறி என்றால் அது உருளைக்கிழங்காகத் தான் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோரும் உருளைக்கிழங்கு பிரியர்கள் தானா? அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடுவீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு ப்ரை செய்ய நினைத்தால், அதற்கு ஸ்பெஷலாக ஒரு பொடியை மட்டும் தயாரித்து சேர்த்து பாருங்கள். அதுவும் வேர்க்கடலை, பூண்டு, வரமிளகாய் சேர்த்து பொடி தயாரித்து சேர்த்து உருளைக்கிழங்கு ப்ரை செய்து பாருங்கள். ருசி வேற லெவலில் இருக்கும். இப்படி செய்யும் உருளைக்கிழங்கு ப்ரையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இன்னும் அல்டிமேட்டாக இருக்கும்.

உங்களுக்கு புதுவிதமான உருளைக்கிழங்கு ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை எடுத்து, அவற்றின் தோலை நீக்கிவிட்டு,
சற்று நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கொத்தமல்லியைத் தூவி வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
சிறிது உப்பு தூவி, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது
உப்பு தூவி கிளறி, மூடி வைத்து, 2-3 நிமிடம் உருளைக்கிழங்கை வேக வைக்க
வேண்டும்.
* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ளதை
சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும்
புதுவிதமான உருளைக்கிழங்கு ப்ரை தயார்.



Click it and Unblock the Notifications
