Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
உருளைக்கிழங்கு அவல் உப்புமா
பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது கோதுமை ரவை கொண்டு செய்யும் உப்புமா என்று பயப்பட வேண்டாம். அவல் கொண்டு செய்யும் உப்புமா. அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும் அவல் உப்புமா. இது மிகச்சிறந்த காலை உணவு மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு அவல் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 2 கப்
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக நறுக்கியது)
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் தண்ணீர், உப்பு, 1/2 டீஸ்பூன் சக்கரை, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், தீயை அதிகரித்து, உருளைக்கிழங்கை பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் அவலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவல் நன்கு சூடானதும், மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு அவல் உப்புமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
