Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சத்தான பொரிவிளங்காய் உருண்டை ரெசிபி...இதை செஞ்சு சாப்பிட்டு பாருங்க... எலும்பு இரும்பு மாதிரி மாறும்...!
Porivilangai Urundai Recipe in Tamil: தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எப்போதும் சுவையை மட்டுமே பிரதானப்படுத்தியதாக இருந்தத்திலை. ஏனெனில் அவை சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. அப்படி தமிழர்கள் கடந்த காலத்தில் ஆரோக்கியத்திற்காக சாப்பிட்ட மிகவும் பிரபலமான மற்றும் சுவையான தின்பண்டங்களில் ஒன்றுதான் பொரிவிளங்காய் உருண்டை.
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உருண்டை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது, குறிப்பாக எலும்புகளையும், பற்களையும் வலுப்படுத்தக்கூடியது. புரோட்டினும், நார்ச்சத்துக்களும் நிறைந்த இந்த மாவு உருண்டையானது நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்களைத் தரக்கூடியது. அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் சேர்த்து செய்யப்படும் இந்த உருண்டையானது சுவையையும், ஆரோக்கியத்தையும் அளிக்கக்கூடியது.

உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான பொரிவிளங்காய் உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரிவிளங்காய் உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பச்சரிசி
- 1/2 கப் சம்பா கோதுமை
- 1/2 கப் பாசிப்பருப்பு
- 1/2 கப் கடலைப்பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்
- 1 டீஸ்பூன் சுக்கு
- 2 சிட்டிகை ஏலக்காய் பொடி
- 1/2 கப் வெல்லம்
செய்முறை:
- ஒரு கடாயில் பச்சரிசியை பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். இதை தனியாக வைக்கவும்
- பின்னர் சம்பா கோதுமையையும் இதேபோல வாசனை வரும் வரை வறுக்கவும். அது கருகாமல் பார்த்துக் வறுக்கவும். சம்பா கோதுமை இல்லையென்றால் முழு கோதுமையையும் பயன்படுத்தலாம்.
- பின்னர் பாசிப்பருப்பைச் சேர்த்து, அது நல்ல பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். முழு பச்சைப் பருப்பையும் சேர்த்து வறுக்கலாம்.
- இறுதியாக கடலைப்பருப்பை சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும். மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறவும்.
- வறுத்த வைத்த அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு மென்மையாக அரைக்கவும். அரைத்த மாவை சல்லடையில் சலித்து எவ்வளவு மென்மையாக மாவு எடுக்க முடியுமோ அதை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் துருவிய தேங்காயை ஈரப்பதம் நீங்கி நல்ல தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
- பாகு தயாரானதும் அதில் வறுத்த தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும்.
- இறுதியாக இந்த பாகை அரைத்து வைத்த மாவில் சூடாக சேர்த்து உங்களுக்கு வேண்டிய அளவில் உருண்டை பிடித்து ஆற வைத்தால் சத்தான, சுவையான பொரிவிளங்காய் உருண்டை ரெடி!



Click it and Unblock the Notifications