Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
Poricha Kuzhambu Recipe In Tamil: ஒவ்வொரு நாளும் என்ன குழம்பு வைப்பது என முடிவெடுப்பது சிரமமாக உள்ளதா? மேலும் எப்போதும் ஒரே குழம்பு செய்து போரடித்துவிட்டதா? உங்கள் சமையலை சட்டென்று முடிக்க வேண்டுமா? முக்கியமாக மூன்று வேளையும் கஷ்டப்பட்டு சமைக்காமல், ஒரே குழம்பு வைத்து மூன்று வேளையும் சாப்பிட வேண்டுமா? அப்படியானால் பொறிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பை செய்தால், அதை இட்லி, சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பொறிச்ச குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொறிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
* கத்திரிக்காய் - 2 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - 2 1/2 கப்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* அரைத்த தேங்காய் விழுது
* கொத்தமல்லி - சிறிது
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - சின்ன மூடி அல்லது 3/4 கப் (துருவியது)
* பூண்டு - 3 பல்
* சின்ன வெங்காயம் - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து,
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய்,
உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10-15
நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பூண்டு, சின்ன
வெங்காயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி 3 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பொறிச்ச
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
