Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
வீட்டுல நமத்து போன பொரி அதிகமா இருக்கா? அப்ப வேஸ்ட் பண்ணாம காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க..
Pori Paniyaram Recipe In Tamil: உங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வாங்கிய பொரி உள்ளதா? அதுவும் அந்த பொரி நமத்து போயுள்ளதா? அந்த பொரியை தூக்கிப் போட மனசு இல்லையா? அப்படியானால் அந்த பொரியைக் கொண்டு காலையில் ஒரு சுவையான டிபனை செய்து சாப்பிடுங்கள். அது தான் பொரி பணியாரம்.
இந்த பணியாரம் செய்வது மிகவும் சுலபம். தினமும் காலையில் இட்லி, தோசை செய்து சாப்பிடாமல், ஒருமுறை இந்த பொரி பணியாரத்தை செய்து சாப்பிடுங்கள். அதுவும் சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னியை செய்து சாப்பிடும் போது, சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பொரி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொரி - 3 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* முந்திரி - 5-6
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* ரவை - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
* தக்காளி - 3 (நறுக்கியது)
சட்னி தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பொரியை போட்டு, அதில் நீரை ஊற்றி 5
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மிக்சர் ஜாரில், ஊற வைத்த பொரியை பிழிந்துவிட்டு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த பொரியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி,
பெருங்காயத் தூள் சேர்த்து திளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ரவையை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி,
அரைத்து வைத்துள்ள பொரியுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, ஓரளவு
கெட்டியாக கலந்து மூடி வைத்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னியை தயார் செய்யுங்கள். அதற்கு மிக்சர் ஜாரில்
வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னியை தாளிக்க
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான தக்காளி சட்னி தயார்.
* பின்பு ஊற வைத்த பொரி மாவில் சிறிது நீரை ஊற்றி, பொடியாக நறுக்கிய
கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து நன்கு பணியார மாவு பதத்திற்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதன்
குழிகளில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி,
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், பொரி பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications