Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சிம்பிளான மாலை நேர ஸ்நாக்ஸ்... பொரி பக்கோடா
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? ஆனால் எப்போதும் போன்று பஜ்ஜி, போண்டா எதுவும் வேண்டாம் என்று கூறுகிறார்களா? உங்கள் வீட்டில் பொரி உள்ளதா? அப்படி அந்த பொரியைக் கொண்டு ஒரு சுவையான பக்கோடா செய்து கொடுங்கள். இந்த பொரி பக்கோடா செய்வது மிகவும் சுலபம்.
மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் சுவையாக இருக்கும். உங்களுக்கு பொரி பக்கோடா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பொரி - 1 கப்
* கடலை மாவு - 1/4 கப்
* அரிசி மாவு - 1/8 கப்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்த்தில் பொரி, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை சிறிது சிறிதாகப் போட்டு, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து பக்கோடா கலவையையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான பொரி பக்கோடா தயார்.
குறிப்பு:
* பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால், மாவுடன் சிறிது சூடான எண்ணெயை ஊற்றி பிசைய வேண்டும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications