Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
பூண்டை வழக்கமான சட்னி செய்யாம இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Poondu Thokku Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை அல்லது மாலை தினமும் இட்லி அல்லது தோசைதான் செய்கிறீர்களா? பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் சைடிஷாக செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்ய மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற தவறான எண்ணம் நமக்குள் வந்து விட்டது.
உண்மையில் இட்லி, தோசைக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் பூண்டு தொக்கை 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு பூண்டு தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பூண்டு - 2
- பழுத்த தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 5
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மல்லி தூள் - 1 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பூண்டு, இஞ்சி மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் பொரித்து வைத்திருக்கும், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து கிளறவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் ஆன பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- தக்காளி குழைந்து வெந்தவுடன், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இந்த பூண்டு தொக்கு, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்துடனும் சாப்பிட பக்காவான சைடிஷாக இருக்கும்.
- உங்களுக்கு தொக்கு வேண்டாம் குழம்பு வேண்டுமென்றால், இறுதியில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இந்த முறையில் பூண்டு தொக்கு செய்யும் போது புளி சேர்க்க வேண்டிய அவசியமில்லை.



Click it and Unblock the Notifications