Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
பூண்டும், தக்காளியும் வெச்சு.. ஒருடைம் இந்த சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்...
Poondu Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு ஒவ்வொரு நாளும் சட்னியை முடிவு செய்வதற்கு கடினமாக இருக்குமா? எப்போதும் ஒரே சுவையில் சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சட்னியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பூண்டும், தக்காளியும் கொண்டு சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னி தக்காளி சட்னியைப் போன்றே இருப்பதால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். பேச்சுலர்கள், வேலைக்கு செல்வோர் இந்த சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், சட்டென்று செய்ய வசதியாக இருக்கும். இந்த சட்னி நினைத்திராத வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 10
* தக்காளி - 1
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* கொத்தமல்லி
* கறிவேப்பிலை
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் வரமிளகாயையும்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளி மற்றும் கொத்தமல்லியைத் தூவி வதக்க
வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லியைத் தூவி
வதக்கி, அரைத்த சட்னியை சேர்த்து, 5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க
வேண்டும்.
* சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
