Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ருசியான... கல்கண்டு பொங்கல்
பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கல் தான். அந்த பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கல்கண்டு பொங்கல். இந்த கல்கண்டு பொங்கலானது, சர்க்கரை பொங்கல் போன்றே சுவையைக் கொண்டிருக்கும்.
Pongal 2023: பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகிக் கொண்டிருப்போம். பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே பொங்கல் தான். அந்த பொங்கலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கல்கண்டு பொங்கல். இந்த கல்கண்டு பொங்கலானது, சர்க்கரை பொங்கல் போன்றே சுவையைக் கொண்டிருக்கும். ஆனால் இது வெள்ளை நிறத்தில் இருக்கும். நீங்கள் குக்கரில் தான் பொங்கல் வைப்பீர்கள் என்றால், இந்த கல்கண்டு பொங்கலை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு கல்கண்டு பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்கண்டு பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/2 கப்
* பால் - 2 கப்
* கல்கண்டு - 1/3 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கல்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய பச்சரிசியை குக்கரில் போட்டு, அதில் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைவான தீயில் வைத்து மீண்டும் ஒரு 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சாதத்தை கரண்டியா மசித்து விட வேணடும்.
* பின்னர் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பொடித்த கல்கண்டை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
