Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
தோசைக்கு எப்பவும் சட்னி செய்யாம.. ஒரு டைம் இந்த குருமாவை செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Plain Vellai Kurma Recipe In Tamil: தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னி என்று தான் செய்வீர்களா? இப்படி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் ப்ளைன் வெள்ளை குருமாவை செய்யுங்கள்.
இந்த ப்ளைன் வெள்ளை குருமா தோசையுடன் மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி, இடியாப்பம், அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ருசியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ப்ளைன் வெள்ளை குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளைன் வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்ப் டித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* இஞ்சி - 3 துண்டு
* பூண்டு - 6 பல்
* கசகசா - 1 டீஸ்பூன் (சுடுநீரில் ஊற வைத்தது)
* முந்திரி - 10 / பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 5
* பட்டை - 2 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* பச்சை மிளகாய் - 4 (லேசாக கீறியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - குருமாவிற்கு தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், இஞ்சி, பூண்டு, நீரில்
ஊற வைத்த கசகசா, முந்திரி, சோம்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி இலை,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து, வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, 2 நிமிடம்
கிளறி, குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலையை சேர்த்து கிளறினால், சுவையான ப்ளைன் வெள்ளை குருமா
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











