ஈவ்னிங் நேரத்துல 10 நிமிடத்தில் சுவையான ஸ்நாக்ஸ் செய்யணுமா? அப்ப அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை செய்யுங்க..

Posted By:

Pineapple Rava Paniyaram Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு, பசியைப் போக்கும் வகையிலும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அன்னாசிப்பழம் உள்ளதா?

அப்படியானால் சுவையான மற்றும் மென்மையான அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை செய்யுங்கள். இந்த பணியாரம் நன்கு இனிப்பாகவும், பஞ்சு போன்று மென்மையாகவும் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Pineapple Rava Paniyaram How To Make a Pineapple Rava Cake Recipe

உங்களுக்கு அன்னாசிப்பழ ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அன்னாசிப்பழ ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவை - 1/2 கப்
* மைதா - 1/4 ப்
* சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - சிறிது
* உப்பு - 1 சிட்டிகை
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/4 கப்
* நாட்டுச்சர்க்கரை - சிறிது
* அன்னாசிப்பழம்- சிறிது (பொடியாக நறுக்கியது)
* நெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அத்துடன் மைதா, சர்க்கரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய், தயிர், ஏலக்காய் தூள், 1 சிட்டிகை உப்பு, 1/4 டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை 1/4 கப் ஊற்றி கட்டிகளின்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், இன்னும் கொஞ்சம் பாலை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மிகவும் நீர் போன்று கலந்து கொள்ள வேண்டாம். ஓரளவு கெட்டியாகவே கலந்து கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், குழிகளில் முதலில் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அந்த குழிகளில் சிறிது நாட்டுச்சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அந்த குழிகளில் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழ துண்டுகளை சிறிது சேர்க்க வேண்டும்.
* அடுத்து அந்த குழிகளில் கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, பணியாரங்களை திருப்பிப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான அன்னாசிப்பழ ரவா பணியாரம் தயார்.

Image Courtesy: Madras Samayal

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 8, 2024, 17:53 [IST]
Desktop Bottom Promotion