Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
பிச்சிப்போட்ட கோழி வறுவல்... இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Pichipotta Kozhi Varuval Recipe In Tamil: நைட் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வாய்க்கு ருசியாக, அதே சமயம் சிம்பிளாகவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கனை வாங்கி வந்து, பிச்சுப்போட்ட கோழி வறுவலை செய்யுங்கள். இந்த வறுவல் 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் மிகவும் சுலபமாக இருக்கும்.
மேலும் இந்த வறுவலுக்கு ஒரே ஒரு மசாலாவை அரைத்தால் போதும். மற்றபடி இந்த வறுவல் புதிதாக சமைப்பவர்களும் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த வறுவலை செய்யலாம். இந்த வறுவல் சப்பாத்தியுடன் மட்டுமின்றி, அனைத்துவிதமான உணவுகளுக்கும் ஒரு சிறந்த சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு பிச்சுப்போட்ட கோழி வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிச்சுப்போட்ட கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - 1 டீஸ்பூன்
மசாலா பொடிக்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 3
* மல்லி - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5- பல் (தட்டிக் கொள்ளவும்)
* இஞ்சி - 1/2 இன்ச் (தட்டிக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் கழுவிய சிக்கனை போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், 1
டம்ளர் நீர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி,
அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு,
பட்டை, கிராம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களைப் போட்டு அரைத்து பொடி
செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் குக்கரை திறந்து, அதில் உள்ள சிக்கனை மட்டும் தனியாக ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் வேக வைத்த நீரை பத்திரமாக
வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் வேக வைத்த சிக்கனை பிச்சு போட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,
நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, 1 நிமிடம் கிளறி,
சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி 2
நிமிடம் நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து, 6-7 நிமிடம் பச்சை வாசனை
போக சிக்கனை வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான பிச்சுப்போட்ட கோழி வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











