Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா
Pichipotta Chapati Omelette Upma: தினமும் ஒரே மாதிரி சமைச்சு போரடிச்சுடுச்சா? ஒரே மாதிரியான சமையலால் உங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவர்கள் விரும்பி சாப்பிடும் படி, அதுவும் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பொருட்களைக் கொண்டு ஒரு அசத்தலான சுவையில் ஒரு உப்புமா செய்து கொடுங்கள்.
உப்புமா என்றதும் வழக்கமாக செய்யும் ரவையைக் கொண்டு செய்யக்கூடியது என்று நினைக்க வேண்டாம். இது மீந்து போன சப்பாத்தி மற்றும் முட்டை ஆம்லெட் கொண்டு செய்யக்கூடிய உப்புமா. இந்த பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா மிகச்சிறந்த காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் இருக்கும்.

உங்களுக்கு பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆம்லெட் செய்வதற்கு...
* முட்டை - 2
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சப்பாத்தி - 5
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகுத் தூள்
மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் அடித்து
வைத்துள்ள முட்டையை ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சப்பாத்திகளை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதேப் போல் ஆம்லெட்டையும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும். பின் அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்க
வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்கி, பின் பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் சிறிது உப்பு
தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி
சேர்த்து கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, 4-5 நிமிடம்
நன்கு காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் புதினா இலைகளை சேர்த்து ஒரு நிமிடம்
வதக்கி, பின் சப்பாத்தி, ஆம்லெட் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான பிச்சிப்போட்ட சப்பாத்தி ஆம்லெட் உப்புமா
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
