Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மழைநேரத்தில் இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. நெஞ்சு சளி கரையும்.. நோயெதிர்ப்புசக்தியும் அதிகரிக்கும்
Pepper Garlic Rasam Recipe In Tamil: தற்போது கோவிட்-19 வழக்குகள் இந்தியாவில் அதிகரித்து வருவதோடு, தென்மேற்கு பருவ மழையும் தொடங்கியுள்ளது. இதனால் நிறைய பேர் சளி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். இந்நிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கலாம்.
அதுவும் மருத்துவ பண்புகளை அதிகம் கொண்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ரசத்தை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும். ரசத்தில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் சத்தானது மட்டுமின்றி, ருசியானது தான் மிளகு பூண்டு ரசம்.

இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு, மஞ்சள் தூள், புளி ஆகியவற்றில் மருத்துவ பண்புகள் அதிகம் உள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் ரசப் பிரியர் என்றால், தற்போதைய காலகட்டத்தில் மிளகு பூண்டு ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு மிளகு பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு பூண்டு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* மிளகு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊ வைத்துள்ள புளியை பிசைந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி,
கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, கைகளால் நன்கு
பிசைந்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து சில நொடிகள் வதக்க
வேண்டும்.
* அதன் பின் புளிக்கரைசலை ஊற்றி கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, நுரை கட்டி
வரும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மிளகு பூண்டு ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications











