Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை
பீர்க்கங்காயை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Peerkangai Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிடமாட்டார்களா? அதுவும் பீர்க்கங்காய் என்றால் தொடவேமாட்டார்களா? இதுவரை நீங்கள் பீர்க்கங்காயை பொரியல், கடையல், குழம்பு என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த பீர்க்கங்காயைக் கொண்டு கூட்டு செய்துள்ளீர்களா? அதுவும் கடலைப் பருப்பு சேர்த்து கூட்டு செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கூட்டு ரெசிபியை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம், சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த பீர்க்கங்காய் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 3/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கூட்டு தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய அளவு வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* பீர்க்கங்காய் - 250 கிராம் (ஓரளவு பெரியதாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை எடுத்து
நீரில் 2 முறை கழுவ வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து 3/4 கப்
நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய்
மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய பீர்க்கங்காய் மற்றும் பெருங்காயத் தூள்,
மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பீர்க்கங்காயின் நிறம் மாறத் தொடங்கியதும், அதில் 1/2 கப் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி
மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு
சேர்த்து, திறந்தே வைத்து 4 நிமிடம் நீர் ஓரளவு சுண்டும் வரை கொதிக்க
வைத்து கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய்
கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications