Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சப்பாத்திக்கு வேர்க்கடலை வெச்சு இந்த மாதிரி ஒரு சைடு டிஷ் செய்யுங்க.. சும்மா அள்ளும்...
Peanut Masala Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை விட சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
வீட்டில் வேர்க்கடலை இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் மசாலா செய்யுங்கள். இந்த வேர்க்கடலை மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசை, பூரி போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1 கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தனி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வேர்க்கடலையை சுடுநீரில் 4 மணிநேரம் மூடி வைத்து ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு
தூவி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, சிறிது வேர்க்கடலையை மிக்சர்
ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம்
வதக்கி, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, வேக வைத்துள்ள
வேர்க்கடலை மற்றும் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து மூடி
வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து 2-3
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
வேர்க்கடலை மசாலா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
