Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சப்பாத்தி, பூரிக்கு ஒருமுறை இப்படி பட்டாணி மசாலா செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க..
Pattani Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் பட்டாணி வாங்கி ஒருமுறை மசாலா செய்யுங்கள்.
இந்த பட்டாணி மசாலா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ஹோட்டல்களில் கொடுக்கப்படும் மசாலாவைப் போன்று ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் பட்டாணி மசாலாவை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 200 கிராம்
* சுடுநீர் - 1/2 கப்
* முந்திரி - 8 (வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்தது)
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி நன்கு
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, 1/2 கப் சுடுநீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்த முந்திரியை அரைத்து பேஸ்ட்
செய்து கொள்ள வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள முந்திரி
பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
பட்டாணி மசாலா தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications