பாசிப்பருப்பும், கோதுமை ரவையும் வெச்சு.. இப்படி உப்புமா செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Pasiparupu Wheat Rava Upma Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்யுங்கள். ஆனால் உப்புமா என்றால் உங்கள் வீட்டில் உள்ளோர் அலறி அடித்து ஓடுவார்களா?

அப்படியானால் ஒருமுறை கோதுமை ரவாவுடன் பாசிப்பருப்பை சேர்த்து உப்புமா செய்து கொடுங்கள். இப்படி உப்புமா செய்யும் போது பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக செய்தால், இன்னும் அருமையாக இருக்கும்.

Pasiparupu Wheat Rava Upma How To Make a Moongdal Gothumai Rava Upma

உங்களுக்கு பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாசிப்பருப்பு - 1/2 கப்
* கோதுமை ரவை - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 துண்டு (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்

சட்னிக்கு...

* தேங்காய் - 1/2 மூடி
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 1 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதில் நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து, மஞ்சள் தூளை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வதங்கியதும், ஊற வைத்த பாசிப்பருப்புடன், கோதுமை ரவையை சேர்த்து 2 முறை கழுவி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் நெய் ஊற்றி நன்கு கிளறினால் சுவையான பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமா தயார்.
* அடுத்து மிக்சர் ஜாரில் 1/2 மூடி தேங்காய், பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், தேங்காய் சட்னி தயார். இந்த சட்னியை பாசிப்பருப்பு கோதுமை ரவா உப்புமாவுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Friday, May 23, 2025, 7:00 [IST]
Desktop Bottom Promotion