Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா டக்குனு இத செய்யுங்க... வீட்ல எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க...!
Paruppu Sadam Recipe in Tamil: குழந்தைகளுக்கு பெரும்பாலும் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்தையே விருப்பி சாப்பிடுவார்கள். அவர்கள் விரும்புவதால் நாமும் அதையே அவர்களுக்கு கொடுப்போம். ஆனால் உணவில் பருப்பு சேர்ப்பது ஓரளவிற்கு உடலுக்கு தேவையான புரதத்தை கொடுக்கும்.
குழந்தைகள் சாம்பார் போன்ற பருப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்கிறார்கள். அவர்களை விரும்பி சாப்பிட வைக்கவும், நமக்கு செய்ய எளிதாக இருக்கும் ஒரு உணவை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சரி வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- அரிசி - 1 கப்
- துவரம் பருப்பு - ¼ கப்
- தக்காளி - 3
- பெரிய வெங்காயம் - 2
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- கருவேப்பிலை - 1 கொத்து
- பூண்டு - 10 பல்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- உடைத்த உளுந்து - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- நெய் - 3 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி மற்றும் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் சேர்த்து அலசி கொள்ளவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கவும்.
- தக்காளியை நன்றாக கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய விடவும்.
- அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- அதில் கடலைப்பருப்பு மற்றும் உடைத்த உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் வரமிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைப்பதம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- பின் அதனுடன் நன்கு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் கழுவி ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.
- 4 அல்லது 5 விசில் விட்டு நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து கிளறினால் சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி!



Click it and Unblock the Notifications