இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த பருப்பு சட்னி செய்யுங்க.. வழக்கமாக சாப்பிடுறத விட அதிகமா சாப்பிடுவாங்க..

Posted By:

Paruppu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து சுவைத்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இருந்தால், அந்த மூன்று பருப்பையும் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யுங்கள். இந்த பருப்பு சட்னி புரோட்டீன் நிறைந்தது என்பதால், சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.

Paruppu Chutney How To Make Dal Chutney Recipe

உங்களுக்கு இந்த பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 2 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து பொன்னிறமாவ வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்கள், புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை அதில் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து இறக்கினால், சுவையான பருப்பு சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 16, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion